ரூம் மேட் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனைவி, மக்கள், பெற்றோர், உடன்பிறப்பு மட்டும்
இல்லைங்க, ரூம் மேட் அமைவது கூட இறைவன் கொடுத்த வரம் தான்... என் வாழ்க்கைல எனக்கு
வாச்ச ரூம் மேட்ஸ் எல்லாரும் ஒவ்வொரு விதம். நானும் காலேஜ் நாலு வருஷம் முடிச்சு
இங்க வேளைக்கு சேந்து ஐஞ்சு வருஷம் ஆச்சுங்க. இது வர ஒரு நல்ல ரூம் மேட் அமைஞ்சது
இல்லை. எல்லாம் தல விதி. என்னோட ரூம் மேட்ஸ் மற்றும் என் பக்கத்துக்கு ரூம் ஜீவராசிகல
பத்தி கொஞ்சம் பேசலாமா?
நம்ம லிஸ்ட்ல பர்ஸ்ட் நாரவாய் குமார்:
ஒரு பேச்சுக்கு தான் நாரவாய்னு சொல்றோமே ஒழிய பய
புள்ளைக்கு வாய் மட்டும்மல்லாமல் சகல பாகங்களும் நாரும். கிட்ட வந்து சிரிச்சான்னா கெட்டுப் போன புளிசொறு
நாத்தம் கொடலை புடுங்கும். இவனோட ச்பெசாலிட்டி என்னனா அவன்
சொல்ற ஜோக்ஸ்கு நாம சிரிச்சே ஆகணும். சிரிக்கலனா கெட்ட கோவம் வரும். அவனுக்கு இது
வரைக்கும் புரியாத ஒரு விஷயம் என்னனா தனக்கு ஏன் இன்னும் பிகர்
செட் ஆகலைங்க்றது மட்டும்
தான். உங்களுக்கு தில் இருந்தா அவன்ட மறக்காம சொல்லுங்க.
அடுத்து நம்ம ஓட்ட காலணா கணேஷ்:
பய புள்ள ஓவர் ஷார்ப். ஊர்ல ஒருத்தன் கூட இவன
ஏமாத்த முடியாது. மச்சான் நேத்து ரெண்டு பெரும் டீ சாப்டோம்ல அதுக்கு நீ எனக்கு
நாலு ரூவா தரனும். ஆனா நான் உனக்கு
ஏற்கனவே மூணு ரூவா பாக்கி வெச்சுருக்கேன். சோ கணக்கு பண்ணி பாத்தா நீ எனக்கு ஒரு
ரூவா தரனும். அவசரம் இல்ல டா.. பொருமையா குடுனு பவ்யமா கேக்ற கேரக்டர். ஆனா அடுத்த
தடவ அவன் கேக்ரதுக்கு முன்னாடி பிச்ச எடுத்தாவது அந்த ஒரு ரூபாய அவன்ட
குடுத்துட்டா நம்ம தன்மானம் காப்பாற்றப்படும்.
இறுதியாக நம்ம சாம்பு மவன்:
இவனோட ஒரிஜினல் பேரு ரங்கராஜன். பெட்ஷீட் ல வடிகட்டின
அக்மார்க் அம்பி. ஒரு நாளைக்கு 23 மணிநேரம் மட்டும் தான் படிப்பு பத்தி பேசுவான். காசு
மேட்டர்ல இவன் நாலு கணேஷ்கு சமம். இவன் கிட்ட கடன் வாங்கவே முடியாது. அதையும்
மீறி நீங்க அவன் கிட்ட
கடன்
வாங்கிடிங்கனா நீங்க டாய்லெட்ல இருந்தாலும் உள்ள வந்து
வசூல் பண்ணீட்டு தான் போவான். தம்பி அவ்ளோ ஷார்ப். கிளாஸ் ல இவன்
Excuse me Sir, What is the procedure to change the
room கிற மாதிரி அநாவசியமான பல கேள்விகள் கேட்டதால
இவனுக்கு அந்த பட்ட பேரு.
இப்படியாகபட்ட ரூம் மேட்ஸ்
கூட தங்கினா என்
வாழ்கை எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சு பாருங்க. சரி நம்ம ரூம் தான் இப்படி
நாசமா போச்சு, பக்கத்துக்கு ரூமாவது ஒழுங்கா இருக்கானு
பார்த்தா அது இன்னும் மோசம்.
ஹாஸ்டல் ல எனோட பக்கத்துக்கு ரூம்க்கு பேரு
கல்யாணி பார். 24 மணிநேரம் சூது, குடி, கட்ட பஞ்சாயத்துனு கச்சேரி கலை
கட்டும். ஐஞ்சு பேரு தங்க வேண்டிய ரூம்ல எப்பவும் பன்னிரண்டு பேரு இருப்பானுங்க.
வார்டன் விசிட் வந்தா புகை போட்ட பெருச்சாளி மாதிரி சந்து போந்துல எல்லாம்
புகுந்து ஓடுவாங்க.
என்னடா இது நம்ம காலேஜ் வாழ்கை தான் இப்டி வீனா
போச்சே. அட
வேலைக்கு போற எடதுலயாவது கொஞ்சம் தெளிவான ரூம் மேட்ஸ் கிடைப்பாங்கனு
ஆசை பட்டு வந்தேன். நம்ம விதி தான் மிகவும் வலியது ஆச்சே.
மொதல்ல நம்ம FACT ரவி:
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு கிற பழமொழி எனக்கு
அவன பார்த்த அப்புறம் தான் புரிய ஆரம்பிச்சது. சார் அதிதீவிர புத்திசாலி. அவனுக்கு
தெரியாத விஷயமே இல்லன்னு சொல்லலாம். Java,
Cobol, dotnet, vbsript, car manufacturing,
stock market, nano technology, bio engineering, American politics னு எதை பத்தி கேட்டாலும் பின்னி பெடலேடுப்பான். அவன் கிட்ட இருக்க ஒரே கெட்ட பழக்கம் பேச
ஆரம்பிச்சா நிறுத்த மாட்டான். தெரியாத்தனமா அவன்ட ஒரு ஜோக் சொல்லிடிங்கனா அந்த
ஜோக்க கடிச்சு கொதறி பிச்சு பீஸ் பீஸ் ஆக்கிருவான். அடுத்த முறை அந்த ஜோக்
கேக்கும் போது உங்களுக்கு கண்டிப்பா அழுகை வரும்.
அப்பறம் நம்ம அப்டேட் சங்கர்:
அவன் தங்கி இருக்கிறது, உயிர் வாழ்றது எல்லாமே facebook ல தான். எழுந்தா
நின்னா தண்ணி குடிச்சா, கக்கா போனா எல்லாத்தையும் facebook ல அப்டேட் பன்னிருவான். இதுல என்ன கொடுமைனா
அவன் போடுற அப்டேட்ஸ ஊர்ல ஒரு பய மதிக்கறது கிடையாது. இருந்தாலும் அதை பத்தி
எல்லாம் இவன் கவலை பட்டதே இல்லை. சட்டம் தன் கடமையை செய்யும்னு அவனோட அப்டேட்ஸ்
வந்துகிட்டே தான் இருக்கும். அவன் ஒரு ஜென் துறவி மாதிரி. சில நேரங்களில் சில
தத்துவங்கள் வேற வந்து விழும். பின்னால வர சந்ததியினர் அதை படிச்சு பாத்து தெளிவா
நடந்துபாங்கனு அவனுக்கு ஒரு நம்பிக்கை.
என்ன சொல்ல facebook ல இவனை மாதிரி பல ஜீவராசி அலையுது.அடுத்து நம்ம இதயம் விக்ரம்:
சொந்த காசுல கம்ப்யூட்டர் வாங்க துப்பு இருந்தா அத வாங்கி பாட்டு கேளு. இல்லனா மூடிக்கிட்டு படு. இது தான் நான் விக்ரம் கிட்ட கத்துக்கிட்ட பாடம். அவனுக்கு லவ் பெயிலியர் ஆனதும் ஆச்சு அதனால அவனுக்கு பைத்தியம் புடிச்சதோ இல்லையோ என்னக்கு கண்டிப்பா பைத்தியம் புடிச்சது. அவனும் அந்த பொன்னும் சேந்து பார்த்த அயன் படத்துல வர “நெஞ்சே நெஞ்சே நீ எங்கே” பாட்ட இது வரைக்கும் 20,673 வாட்டி கேட்டிருக்கேன். பாட்ட மாத்துடானு சொனாலும் கேக்க மாட்டான். நம்மளையும் மாத்த விட மாட்டான். இதெல்லாம் கூட பொறுத்துக்கலாம், அவனோட லவ் ஸ்டோரிய 4576 வாட்டி சொல்லிருகான். ஒவ்வொரு முறையும் அதுக்கு ரியாக்சன் குடுக்கணும்னு வேற எதிர் பார்பான். அது தான் மிகபெரிய தலைவலி.
கடவுள் எனக்கு போன ஜென்மத்துல வோர்ஸ்ட் ரூம்
மேட் ப்ராப்திரஸ்து னு சாபம் விட்டாரோ என்னவோ என் விதி இப்டி ஆகிபோச்சு. அதனால
தான் முடிவு செஞ்சு இனி எனக்கு ரூம் மேட் வேண்டவே வேண்டாம். தனிமையிலே இனிமை காண
முடியுமேனு தனியா வீடு எடுத்து தங்கிருகேன்.
எல்லாரையும் பத்தி இவ்ளோ சொல்லிட்டு என்ன பத்தி
ஒண்ணுமே சொல்லலானா இவனுங்க அத்தனை பேரும் சேர்ந்து வந்து அடிப்பானுங்க.
என்னோட நிக் நேம் புலமைபித்தன் பாலாஜி:
காலேஜ் படிக்கும் போது எக்ஸாம் பேப்பர் ல என்ன
எழுதுறது னு தெரியாம “ வானம் நீலம்
ரோட்ல பள்ளம்” னு
நான் கிறுக்கி வெக்க அதை பார்த்த நம்ம உயிர் நண்பன் கவித கவித... சூப்பர் மச்சான்னு உசுப்பேத்தி விட்டான்.
விளைவு உடனே ஒரு 80 page note வாங்கி இதே போல தரமான கவிதைளை அதில் நிரப்பி
ஊர்ல இருக்கிற பத்திரிகை குமுதம், குங்குமம், விகடன், கல்கண்டு, பாக்யா, தினமலர், தினகரன்னு ஒன்னு விடாம ஏன் சிறுவர் மலர்க்கு கூட அனுப்பி வெச்சேன். நல்ல வேளை அவங்க
எல்லாரும் அதை பஜ்ஜி பிழிய மட்டும் யூஸ் பன்னதால இந்த உலகம்
பாலாஜி னு ஒரு அதிதீவிர கவிஞன் கிட்ட இருந்து தப்பிச்சிருச்சு.
ஆனா இவ்ளோ சொன்னாலும் என்னோட ரூம் மேட்ஸ் எல்லாருக்கும் ஒரு குணம் உண்டு. ஹெல்ப்னு போய் கேட்டா உயிரையும் குடுபானுங்க.
Disclaimer: (டேய் மச்சி குமாரு, கணேஷ், வசந்த், ரங்கராஜா, ரவி, சங்கர், விக்ரம், எல்லாரும் என்ன அடிக்கிறதுக்கு முன்னாடி லாஸ்ட் லைன ஒரு வாட்டி நல்லா படிச்சு பாத்துட்டு வாங்க டா...)
இப்படிக்கு உங்கள்,